Monday, November 19, 2007

நீ . . . . . .

யதார்தமாய்ப் பார்க்கையில்
எந்த வித பாதிப்புமில்லை
கண்களைச் சுருக்கிப்
பார்த்த போது கூட
கவனம் சிதறவில்லை
ஓரப் பார்வையில்
பார்த்த போது கூட ஒரளவுதான்
பாதிப்புத் தெரிந்தது
நீ
பார்க்காமல் போன போதுதான்
பாவிமனம் என்ன பாடுபடுகிறது

ஆனந்த மழை

ஒரு நாள் உன்னை விழிகள் பார்க்க
இது யார் என இமைகள் கேட்க்க
இவள் தான் உன் இதயம் என்றது காதல்
உயிரை திறந்துவிடு புரியும்
உனக்குள் இருப்பது யார் தெரியும்
மனதில் எனது உருவம் விரியும் காதல்
கொல்லாமல் கொல்லும் காதல் பொல்லாதது
ஜில் என்ற தீயில் ஜீவன் நனைகின்றது
எங்கே எங்கே நீ எங்கே

உன்னை எண்ணி துடிக்கும் துவளும் இதயம் தினசரி
இப்படி தான் யவர்க்கும் இருக்கும் காதல் கனல் விழி
மேகத்தை போல வந்தேன் பற்றி எரிந்தேன்
உயிரோடு வாழ்ந்த போதும் மூச்சு ம்றந்தேன்
நீ வந்தபோது தானே என்னை அறிந்தேன்
கண்ணிரில் ஓலை விட்டு காத்து கிடந்தேன்
மறு ஜென்மம் இருவர் உயிரும் இணைந்து இருந்தது
இந்த ஜென்மம் உனது மனது உறவை மறந்தது
அழியாத காதல் சின்னம் கட்டி முடித்தேன்
அடையளம் காட்ட இன்று உன்னை அழைத்தேன்
வரலாற்றில் நேற்று நமது பேரை படித்தேன்
நூற்றண்டு தாண்டி உன்னை கண்டுபிடிதேன்

எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே
நீ
எங்கே

நீ எப்படி உணர்வாய். . . . .

நீண்ட நாட்க்களாக
கவிதை எழுதவில்லை
உடல் சொல்வது கேட்பதில்லை
மனம் சஞ்சலப் படுகிறது
எழுத்துக்கள் பிழையாய் வருகிறது
நீ எங்கிருக்கிறாய்?
எப்பொழுது வருவாய்?
நான் உனக்காக காத்திருப்பதை
நீ எப்படி உணர்வாய். . . . .

Sunday, November 18, 2007

நடை பிணம்

ஊருக்கு போய் வருகிறேன்
என்பதை நீ கூறியும்
மௌனத்தோடு நகர்ந்தேன்
இருப்பினும்
இதயம் சினுங்கத் தொடங்கியது
இனி எத்தனை நாட்கள்
நடை பிணமாய்
அலைய வேண்டுமோ

Friday, November 16, 2007

போடா பொறுக்கி

நீ என்னிடம் காதலைச்சொன்னதும்
நான் ஒன்றும் சொல்லாமல்
ஓடிப்போய் ஒளிந்துகொண்டு
எட்டிப் பார்த்தேன்

எதையோ பொறுக்குவது மாதிரி
நீ குனிந்து கொண்டிருந்தாய்

என்ன பொறுக்குகிறாய்
என்றேன்

உன் காதலைத்தான்
நான் உன்னிடம் காதலைச்
சொன்னால்பதிலுக்கு
நீ என்னிடம் சொல்லாமல்
இப்படியா தரையில் சிந்திப்
பொறுக்கிக் கொள்ளச் சொல்வாய்
என்றாய்

போடா பொறுக்கி

நான் என்ன பதில் சொல்ல?

எனக்குள் உன் நினைவுகள்
நெஞ்சுக்குள் சிக்கிய நெருப்பு துண்டுகளாய்
விழுங்கவும் முடியாமல் வெளியேத்ததவும் முடியாமல்
என் உணர்வுகளை பொசுக்கி கொண்டு
நாள் முழுவதும் என் மனத்தில் சுழன்று அடித்தபடி
இரவுகளில் இன்னும் அதிகமாய் எரியும் தீயை
என் கண்ணீரால் கொஞ்சம் தனிக்கிறேன்
இதையெலாம் புரிந்து கொள்ளாமல்
உன்னை மறந்து விட சொல்பவர்களுக்கு
நான் என்ன பதில் சொல்ல

ஆராத ரணம்

என் உயிரில் ஆராத ரணமாய்
உன் நினைவுகள்
ஆனால் மீண்டும் மீண்டும்
அதை கிரிவிட்டு
அந்த வலியில் சுகம் காண்கிறது
என் மனது